அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி! காரணம் என்ன?

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டுள்ளது. இன்று ஒரு டாலருக்கு மதிப்பானது இந்திய ரூபாயில் 84.385 பைசாவாக குறைந்துள்ளது.
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்புபுதியதலைமுறை
Published on

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டுள்ளது. இன்று ஒரு டாலருக்கு மதிப்பானது இந்திய ரூபாயில் 84.385 பைசாவாக சரிந்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றது இந்தியாவிற்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்த நிலையில், மாறாக இந்திய பங்குசந்தையானது கடும் சரிவை சந்தித்து வருகிறது.

பங்கு சந்தையில் இன்றைய நிலவரம்

இந்திய பங்குசந்தையின் இன்றைய நிலவரப்படி நிஃப்டி 24087.25 புள்ளிகளில் தனது வர்த்தகத்தை தொடங்கிய நிலையில், 24141 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. அதே போல் சென்செக்ஸ் 79,298 புள்ளிகளில் தொடங்கிய வர்த்தகமானது 79496 புள்ளிகளில் முடிவடைந்துள்ளது.

பங்கு சந்தை குறைய காரணம் என்ன

அக்டோபர் மாதத்தில் ரூ1.14 லட்சம் கோடி மதிப்பிலான இந்தியப் பங்குகளை விற்ற வெளிநாட்டு நிதிநிறுவனங்கள், இந்த மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் 20,000 கோடி மதிப்பிலான இந்திய பங்குகள் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்திய பங்குசந்தையானது சரிவை கண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ரிசர்வ் வங்கி, 2000 ரூபாய்
ரிசர்வ் வங்கி, 2000 ரூபாய்எக்ஸ் தளம்

மேலும் ரிசர்வ் வங்கி தனது அந்நியச் செலவாணி கையிருப்பில் இருந்து அதிக அளவு டாலரை விற்றுள்ளதால் அன்னிய செலாவணி கையிருப்பு வெகுவாக குறைந்துள்ளது. நவம்பர் 1ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 267.5 மில்லியன் டாலர்கள் மற்றும் முந்தைய வாரத்தில் 346.3 மில்லியன் டாலர்கள் வசூலில் சரிவு சந்தித்துள்ளது

தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் 7220க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ரூ.440 குறைந்து ரூ.57760 க்கு விற்பனையாகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com