ஜப்பானில் நாளை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
அண்மையில் ஆளுங்கட்சியான லிபரல் டெமாகிரடிக் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஃபுமியோ கிஷிடா, ஜப்பான் சட்டப்படி பிரதமராகவும் பதவி ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து நாடாளுமன்றத்தை கலைத்த அவர் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி, நாடாளுமன்றத்தில் உள்ள 465 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்வைத்து ஆளுங்கட்சி பரப்புரை மேற்கொண்டு வருகிறது. ஐந்து எதிர்க்கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளன. இதனால் தேர்தல் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.