அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட ஒரு லாட்டரி சீட்டுக்கு 3,500 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.
தெற்கு கலிஃபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள ஒரு எரிவாயு நிரப்பும் நிலையத்தில் அந்த குறிப்பிட்ட லாட்டரி சீட்டு விற்கப்பட்டுள்ளது. அந்த லாட்டரிச் சீட்டை வாங்கியவர் யார் என்ற விவரம் இதுவரை தெரியவரவில்லை என்று கலிஃபோர்னியா லாட்டரித்துறை தெரிவித்துள்ளது. பரிசு விழுந்த சீட்டை வாங்கியவர் தொகையைப் பெற்றுக்கொள்ள ஒரு வருட காலம் அவகாசம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
பரிசுத் தொகையை சம்பந்தப்பட்டவர் மொத்தமாக வாங்கிக் கொள்ளலாம் அல்லது 29 ஆண்டுகளுக்கு தவணை முறையில் பெற்றுக்கொள்ளலாம் என்று லாட்டரித்துறை தெரிவித்துள்ளது. அதேவேளையில் பரிசுத் தொகையில் 40 விழுக்காடு, அதாவது சுமார் ஆயிரத்து 400 கோடி ரூபாயை வரியாக செலுத்த வேண்டியிருக்கும் என்று லாட்டரித்துறை கூறியுள்ளது.