ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது 8 ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாக்தாத்தின் வட பகுதியில் அல் பலாத் என்ற இடத்தில் அமெரிக்க விமானப்படையினர் தங்கியுள்ள முகாம்களில் இத்தாக்குதல் நடந்ததாகவும் இதில் சில உள்ளூர் அதிகாரிகள் நால்வர் காயமடைந்ததாகவும் ஈராக் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. எனினும் ஈராக்கிலுள்ள ஈரான் ஆதரவு படையினர் இதன் பின்னணியில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தங்கள் நாட்டு படையினர் முகாம்களில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்க அமைச்சர் மைக் பாம்பியோ கண்டனம் தெரிவித்துள்ளார். நடத்தியவர்கள் யார் என தெரியவில்லை. இச்சூழலில் அமெரிக்காவுடன் போர் பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தைக்கு தயார் என ஈரான் கூறியுள்ளது.
இதற்கிடையில் உக்ரைன் விமானத்தை ஈரான் ராணுவத்தினர் தவறுதலாக சுட்டுவீழ்த்திய நிலையில், அவர்களுக்கு எதிராக உள்நாட்டிலேயே போராட்டங்கள் வெடித்துள்ளன. போராட்டம் நடத்துபவர்களை கொன்று விடாதீர்கள் என்றும் உலகம் உங்களை உற்று கவனித்து வருகிறது என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்விட்டரில் ஆங்கிலத்திலும் ஈரானிய மொழியிலும் பதிவிட்டுள்ளார்.