ஜப்பான் நிறுவனம் ஒன்று மனித உருவிலான ரோபோ பூசாரி ஒன்றை உருவாக்கியுள்ளது.
'பெப்பர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ புத்த மத கோட்பாடுகளின் அடிப்படையில் இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகளை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ டோக்கியோவில் உள்ள சர்வதேச கண்காட்சி மையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் மதச் சடங்குகளை செய்யும் பூசாரிகள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலையில் இந்த 'பெப்பர்' ரோபா மக்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என அதனை தயாரித்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மிச்சியோ நாமுரா கூறினார். மேலும் இறுதிச் சடங்குகள் செய்ய ஆகும் செலவும் பெருமளவு குறையும் என அவர் தெரிவித்தார்.