இங்கிலாந்தின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுயிருக்கிறார் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக். ஒரு காலத்தில் உலகின் பொரும்பாலான நாடுகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து ஆண்ட நாடு, இன்று 6 ஆண்டுகளில் 5வது பிரதமரை கண்டிருக்கிறது. குறிப்பாக சொன்னால், இரண்டு மாதங்களுக்குள் லண்டனின் 10 டவுனிங் தெருவில் நுழைந்த மூன்றாவது பிரதமர் ரிஷி சுனக் தான்.
கடைசியாக 1834ல், ஒரு வருடத்தில் இரண்டு முறை மட்டுமே மூன்று பிரதமர்களைக் கண்டது. அதன் பின்பு, 2007ல், தொழிலாளர் கட்சியை சேர்ந்த கார்டன் பிரவுன் பிரதமராக வருவதற்கு முன்பு வரை, பிரிட்டனில் சுமார் மூன்று தசாப்தங்களில் மூன்று பிரதமர்கள் மட்டுமே இருந்தனர். பிறகு கார்டன் பிரவுனை, கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த டேவிட் கேமரூன் வெற்றி பெற்று 2010 – 2016 வரை பிரதமராக இருந்தார்.
வீழ்ச்சியின் தொடக்க புள்ளி -
19ம் நூற்றாண்டில், பிரிட்டன் பணக்கார மற்றும் மிகவும் முன்னேறிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருந்தது. மறுப்பக்கம் இரண்டாம் உலகப் போருக்கு (1939-45) பின்னர் போரினால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஐரோப்பிய நாடுகள் ஒன்றாக இணைக்கப்பட வேண்டும் என்ற சூழல் உருவானது. இந்த சூழல் தான் இன்று அறியப்படும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) என்று உருவாக வழிவகுத்தது. இந்த ஒன்றியம் மூலம் மக்கள், பொருட்கள் மற்றும் சேவைகள் எல்லைகளை கடந்து சுதந்திரமாக செல்வதே நோக்கமாக இருந்தது. பின்னர் பொருளாதார சரிவைத் தடுக்க 1973ல் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தன.
இதை பார்த்த பின்பு, ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான பிரிட்டன் முடிவெடுக்கிறது. இது மிகவும் தாமதமான முடிவு தான். இருப்பினும் பொருளாதார சரிவை சரி செய்வதற்கு பிரிட்டனிடம் வேற யோசனை இல்லை. அப்போது பிரிட்டனின் பிரதமராக இருந்தவர் கன்சர்வேடிவ் கட்சியின் மார்கரெட் தாட்சர்!
ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த இரண்டு ஆண்டுகளில், ஒன்றியத்திலிருந்து பிரிட்டனர் வெளியேற வேண்டும் என்ற குரல்கள் ஒலித்தன. இதன் தொடர்ச்சியாக ஒன்றியத்துடன் பயணிக்கலாமா வேண்டாமா என வாக்கெடுப்பு நடத்தப்பட்டு கூட்டணியில் நீடிக்கவே வாக்குகள் அதிக விழுந்தன. இருப்பினும், அடுத்தடுத்த ஆண்டுகளில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருப்பது பிரிட்டனுக்கு எந்த பயனும் இல்லை என்பது புரிய வந்தது. அடுத்த சில காலங்களில் அதிகரித்த பொருளாதார சுணக்கம் மற்றும் ஐரோப்பியம் ஒன்றியத்தில் இணைந்திருப்பது போன்ற பிரச்சனைகளால் தாட்சர் ராஜினாமா செய்தவுடன், 1990ல் ஜான் மேஜர் பிரதமர் பதவியேற்றார்.
தலைவலியான ஐரோப்பிய ஒன்றியம்!
ஜான் மேஜர், கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்தவர். ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் இணைந்திருப்பது கட்சிக்கு ஏகப்பட்ட பிளவுகளை ஏற்படுத்திய போதிலும் கூட, ஜான் மேஜர் ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரிட்டனின் உறவை வலுப்படுத்தினார். இதனால் ஜான் மேஜருக்கு எதிராக சொந்த கட்சியிலேயே வாக்குகள் விழுந்ததால், ஜான் மேஜர் அரசாங்கம் வீழ்ந்தது. ராஜினாமா செய்தார். ஆனால் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜான் மேஜர் மோசமான தலைமை திறன்களுடனே ஆட்சி செய்ததாக விமர்சிக்கப்பட்டது.
இந்த சமயத்தில் தொழிலாளர் கட்சிக்கு மக்களிடம் வரவேற்பு இருந்தது. 1997-க்கு பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்தது. டோனி பிளேயர் பிரதமரானார். நூற்றுக்கணக்கான சட்டங்கள் பிளேயரின் ஆட்சியின் போது மட்டுமின்றி, அவரை தொடர்ந்து வந்த கார்டன் பிரவுனின் ஆட்சியிலும், ஐரோப்பிய ஒன்றியத்துடனான இங்கிலாந்தின் ஒன்றியத்தை வலுப்படுத்தும் நடைமுறைகள் தொடர்ந்தன.
2008ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இருப்பது இங்கிலாந்துக்கு வளமான பொருளாதாரத்தை வழங்கவில்லை என கட்சிகளை தாண்டி மக்களும் உணர்ந்தனர். கடுமையாக பிளவுபட்ட கன்சர்வேடிவ் கட்சியின் பிரதமர் மந்திரி டேவிட் கேமரூன் 2016 ல் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்தினார். வெளியேறவே வாக்குகள் அதிகமாக விழுந்தன. ஆனால் டேவிட் கேமரூன் ஒன்றியத்துடன் இணைந்திருக்கவே விரும்பினார். எனவே டேவிட் கேமரூன் ராஜினாமா செய்தார்.
உருவானது BREXIT -
இதன்பின்பு, தெரசா மே பிரதமரானார். பிரெக்ஸிட் (BREXIT) அதாவது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தான் தெரசா மேயிடம் இருந்த முக்கியமான பணியாக இருந்தது. மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான பதவியில் இருந்த தெரசா மே 2019 இல் பிரெக்சிட்டை வழங்காமல் ராஜினாமா செய்தார்.
2020ல் இந்த பணி அதே கன்சர்வேடி கட்சியின் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் சென்றது. ஒருவழியாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளிவந்தது.
திணரும் பிரிட்டனன் நிர்வாகம்
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளிவந்த பிரிட்டன் அதாவது பிரெக்ஸிட், நிதி சந்தைகளை உலுக்கியது. நாணயம் சரிந்தது. பிரெக்சிட் எவ்வாறு செயல்படும் என்பது பற்றிய நிச்சயமற்ற நிலை பல ஆண்டுகள் நீடித்தது. பிரிட்டனின், வணிகங்களும் வர்த்தகமும் புதிய ஒழுங்குமுறைக்கு ஏற்பப் போராடுவதால் பொருளாதாரம் சீர்குலைந்தது. பிரிட்டன் அரசாங்கங்கள் இன்றுவரை கூட ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிறகான சீர்குலைவுகளை சரிசெய்ய முடியாமலும், மற்ற ஐரோப்ப நாடுகளுடன் சரியான உறவைக் கண்டறியவும் போராடி வருகிறது.
இந்த சூழலில் தான் பிரிட்டன் கோவிட் பெரும் தொற்றால் பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து உக்ரைன் போர் எரிசக்தி பொருட்களின் கட்டணங்களை உயர்த்தியது. இவை இரண்டும், ஏற்கனவே மோசமாக இருந்த பிரிட்டனின் பொருளாதாரத்தை மேலும் நெறுக்கியுள்ளது. பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் முதலீட்டைக் கொண்டுவரும் வாக்குறுதியைக் காப்பாற்றத் தவறியது, அதிக பணவீக்கம், கடன் சுமை அதிகரித்தல், ஓய்வூதியம் மற்றும் மருத்துவமனை கட்டணங்களை செலுத்த அரசாங்கம் போராடியது, விருந்து சர்ச்சை என பல தார்மீகத் தோல்விகள் போரிஸ் ஜான்சனுக்கு இருந்தன. இதனால் அவரது கட்சியில் கிளர்ச்சி ஏற்பட்டு, இறுதியாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் ராஜினமா செய்தார்.
போரிஸை தொடர்ந்து லிஸ் டிரஸ் பிரதமரானார். விலைவாசி உயர்வு, உக்ரைன் போர் மற்றும் கோவிட் தொற்றின் பின் விளைவுகள் போன்ற சவால்களை லிஸ் டிரஸ் எதிர்கொண்டார். ஆனால் அவரது வரி குறைப்புக்கள் மற்றும் செலவினங்களை அதிகரிப்பது பற்றிய அவரது அறிவிப்பு அனைத்தும் பிரிட்டனின் சந்தைகளை பயமுறுத்தியது. பவுண்ட் மதிப்பு மேலும் சரிந்தது, கடன் வாங்குதல் மற்றும் அடமான வட்டி விகிதங்கள் அபரிமிதமாக உயர்ந்தன. உடனே அவருக்கு எதிர்ப்புகள் எழுந்தவுடன் ராஜினாமா செய்தார். 45 நாட்களில் பிரதமராக இருந்த ஒருவர் லிஸ் டிரஸ் தான். ராஜினாமா செய்வதற்கு முன்பு அவர் பொறுப்பை கூட பார்க்கவில்லை. புதிய நியமித்தார், சிலரை பணி நீக்கம் செய்தார். ஆனால் எதுவும் செயல்படவில்லை. இந்த நேரத்தில் ராணி எலிசபெத்தும் இறந்தார்.
இப்போது, அதே கட்சியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக உள்ளார். சமீபத்திய ஆண்டுகளில், இங்கிலாந்தில் வாக்களிக்கும் பொதுமக்களும் மற்றும் அரசியல்வாதிகளும் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தலைவர்கள் மீது வழக்கத்திற்கு மாறாக அதிக கவனம் செலுத்துகிறார்கள்.
நிறவெறி கட்சியா?
42 வயதில், சுமார் 200 ஆண்டுகளில் இங்கிலாந்தின் மிக இளைய பிரதமர் ரிஷி சுனக் தான். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் மற்றும் பிரதமராகும் போட்டியில் ட்ரஸ்ஸிடம் தோற்கும் முன், அப்போதைய போரிஸ் ஜான்சனின் அமைச்சராக இருந்த சுனக், ராஜினாமா செய்தார். அதுவே பிரதமரின் வெளியேற்றத்திற்கான தொடக்கப் புள்ளியாக அமைந்தது.
நிறவெறியை உலகிற்கு அறிமுகப்படுத்திய கட்சி என்ற பெயருக்கு சொந்தமான கன்சர்வெடிவ் கட்சியில் மாற்று நிற பிரதமாராகி இருக்கிறார் ரிஷி சுனக்.
சுனக் இங்கிலாந்தின் முதல் வேற்று நிறப் பிரதமராகி சரித்திரம் படைத்திருக்கலாம். ஆனால், பொருளாதாரம், தொழிலாளர் நெருக்கடி, சுகாதார சேவை, பிரெக்ஸிட்டிற்குப் பிந்தைய சிக்கல்களை நிவர்த்தி செய்தல் மற்றும் உக்ரைன் போர் குழப்பத்தை சரி செய்தல் போன்ற சவால்களை அவரால் சந்திக்க முடியாமல் போனால், அவரும் முந்தைய வரலாறாக கூட மாறலாம்.