மனித கழிவிலும் பிளாஸ்டிக்.. இது எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்..!

மனித கழிவிலும் பிளாஸ்டிக்.. இது எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்..!

மனித கழிவிலும் பிளாஸ்டிக்.. இது எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்..!
Published on

மனித கழிவுகளில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது முதல்முறையாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஆராய்ச்சியாளர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிளாஸ்டிக்கால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில் பிளாஸ்டிக் ஒழிப்புக்காக மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும் மக்கள் மத்தியில் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்தபாடில்லை. இந்நிலையில் மனித கழிவுகளில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் முதல்முறையாக கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வு ஆராய்ச்சியாளர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 வகையாக சோதனை மேற்கொண்டதில் 9 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மனித கழிவுகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுளள்து. இதில் பெரும்பாலும் பாலிப்ரோப்பிலீன் மற்றும் பாலிஎதிலினின் வகையிலான பிளாஸ்டிக் பொருட்களே ஆகும். இந்த ஆய்வை வைத்து ஆராய்ச்சியாளர்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். அதாவது மனித உடல் அமைப்பிற்குள்ளும் சிறிய அளவிலான பிளாஸ்டிக் பொருட்கள் பரவியிருக்கலாம் என கருதுகின்றனர்.

மக்கள் உண்ணும் உணவு என்றும் கூட பாராமல் வியாபார நோக்கில் பிளாஸ்டிக் பொருட்கள் அதில் கலக்கப்படுவதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இந்நிலையில் மனித கழிவில் ஆராய்ச்சியாளர்கள் பிளாஸ்டிக்கை கண்டுபிடித்துள்ளனர். ஆஸ்திரியாவில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளிவந்துள்ளது. மேலும் உலக மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்களின் கழிவுகளில் நுண்ணிய பிளாஸ்டிக் பொருட்கள் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மனித உடலில் சிறிய அளவிலான பிளாஸ்டிக் பொருட்கள் பரவியிருப்பது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என அச்சப்படும் ஆராய்ச்சியளார்கள், அதன் மூலம் நோய் எதிர்ப்பு அமைப்பிற்கும் பாதிப்பு ஏற்படலாம் என கருதுகின்றனர். உலக பொருளாதார மன்றம், 2050-ஆம் ஆண்டுக்குள் உலகத்தில் உள்ள கடல்களில் மீன்களை காட்டிலும் பிளாஸ்டிக் பொருட்களே அதிகம் நிறைந்திருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com