சைபீரியாவில் 50,000 ஆண்டுகள் முன்பு இறந்த காண்டாமிருகத்தின் உடல் கண்டெடுப்பு.!

சைபீரியாவில் 50,000 ஆண்டுகள் முன்பு இறந்த காண்டாமிருகத்தின் உடல் கண்டெடுப்பு.!
சைபீரியாவில் 50,000 ஆண்டுகள் முன்பு இறந்த காண்டாமிருகத்தின் உடல் கண்டெடுப்பு.!
Published on

சைபீரியாவில் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததாக நம்பப்படும் காண்டாமிருகம் ஒன்றின் உடல் பாதி சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது.

ரஷ்யாவின் கிழக்கு சைபீரியாவில் உள்ள ஒரு உறைந்த பனிப்பரப்பு சமீபத்தில் உருகியது. அப்போது பனிப்பரப்பில் புதைந்து கிடந்த ஒரு இறந்த விலங்கின் உடலை உள்ளூர் மக்கள் மீட்டனர்.

ஆராய்ச்சியாளர்கள் இந்த விலங்கின் உடலை மீட்டு ஆய்வு செய்தபோது, இது 34,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த Woolly Rhino எனப்படும் ஒருவகை காண்டாமிருகத்தின் உடல் என்பதை கண்டறிந்தனர். இந்த காண்டாமிருகம் 20,000 முதல் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

3 அல்லது 4 வயதில் இந்த காண்டாமிருகம் நீரில் மூழ்கியதால் இறந்திருக்கலாம் என்றும் உடல் நிரந்தர உறைபனிப் பரப்பில் புதைந்து கொண்டதால் இத்தனை ஆண்டுகளாக சிதையாமல் இருந்துள்ளது எனவும் ஆராய்ச்சியாளர் புரோட்டோபோபோவ் கூறுகிறார்.

இதேபோல் 2014-ம் ஆண்டும்,  இதே இடத்திற்கு அருகில் Woolly Rhino காண்டாமிருகத்தின் உடல் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. இந்த உடலுக்கு ‘சாஷா’ என்று விஞ்ஞானிகள் பெயரிட்டனர். 'சாஷா' 34 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கணிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com