அமெரிக்காவில் பிரதிநிதிகள் சபை தலைவருக்கான தேர்தலில் குடியரசு கட்சியின் கெவின் மெகார்தி தோல்வி அடைந்துள்ளார். அமெரிக்க அரசியல் வரலாற்றில் நூறு ஆண்டுகளில் இல்லாத நிகழ்வு இது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பிரிதிநிதிகள் சபைக்கான தலைவர் பதவியிலிருந்து நான்சி ஃபெலோசி விலகியிருந்த நிலையில், அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசு கட்சியில் சார்பில் போட்டியிட்டார் கெவின் மெகார்தி. அவர் வெற்றியடைவார் என எதிர்பார்கப்பட்ட நிலையில், முதல் சுற்று வாக்குப்பதிவில் பெரும்பான்மை பெறாமல் தோல்வி அடைந்தார். இதனால் தலைவரை தேர்வு செய்யாமலயே, பிரதிநிதிகள் சபை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு முன்னர் 1923-ம் ஆண்டு இப்படியான சம்பவம் நடந்ததாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதன்பின் 100 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் இப்படி நடக்கிறதாம்.
விரைவில் சபையில் மறுதேர்தல் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.