அயர்லாந்தில் உள்ள கில்லோர்லின் நகரில், நாட்டின் ராஜாவாக, ஆட்டுக்கு முடிசூட்டிய வினோத சம்பவம் நடந்துள்ளது.
அயர்லாந்தின் பழமையான திருவிழாக்களில் ஒன்று பக்ஃபேர் பண்டிகை. இந்த விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஆண்டும் ஓர் ஆட்டைப் பிடித்து, அதனை நகரம் முழுவதும் ஊர்வலமாகக் கொண்டு செல்வர். அதன்பின் அந்த ஆட்டிற்கு ராஜாவாக முடிசூட்டப்படும். திருவிழா முடியும் வரை ஆட்டிற்கு அரச மரியாதைதான்.
இந்த வருடமும் இந்த விழா அந்த நாட்டில் தொடங்கியுள்ளது. முடிசூட்டப்பட உள்ள ஆட்டிற்கு சாம்பல் மரக் கிளைகள் மற்றும் முட்டைக்கோசு ஆகியவை சிறப்பு உணவாக வழங்கப்படுகிறது. திருவிழா முடிந்த பின்னர் ஆடு மீண்டும் அதன் மலை வீட்டிற்கே திரும்பி அனுப்பப்படும் என கில்லோர்லின் நகர மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த முடிசூட்டு விழாவில் நடனம், இசை போன்ற கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 10 முதல் 12 ஆம் தேதி வரை இந்த விழா கொண்டாடப்படுகிறது.