நிலநடுக்கப் பாதிப்புகளை சீரமைக்க அரசு உதவி செய்யக்கோரி மெக்சிகோ மக்கள் பேரணியாக சென்றனர்.
மெக்சிகோவில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சிதிலமடைந்த கட்டடங்கள், வீடுகளை சீரமைக்க அரசு உதவ வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் பேரணியாக சென்றனர். அப்போது ஊழல் இல்லாத சிவில் பாதுகாப்பு உத்தரவாதங்களை அரசு வழங்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தினர்.
கடந்த மாதம் மெக்சிகோவில் ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவான நிலநடுக்கத்தால் 369 பேர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கத்தால் மெக்சிகோ தலைநகரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. சுமார் 40 பெரிய கட்டடங்கள் தரைமட்டமாயின, ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன.