’உலகின் வயதான குழந்தைகள்’ - 30 ஆண்டுகளுக்குமுன் பதப்படுத்தப்பட்ட கருவிலிருந்து ட்வின்ஸ்!

’உலகின் வயதான குழந்தைகள்’ - 30 ஆண்டுகளுக்குமுன் பதப்படுத்தப்பட்ட கருவிலிருந்து ட்வின்ஸ்!
’உலகின் வயதான குழந்தைகள்’ - 30 ஆண்டுகளுக்குமுன் பதப்படுத்தப்பட்ட கருவிலிருந்து ட்வின்ஸ்!
Published on

30 ஆண்டுகளுக்கு முன்பு, 1992ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதப்படுத்தப்பட்ட கருமுட்டைகளிலிருந்து இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து அமெரிக்காவின் ஒரேகான் மாகாண தம்பதி சாதனை படைத்துள்ளனர். இது 27 ஆண்டுகளாக உறைய வைக்கப்பட்ட கருமுட்டையிலிருந்து 2020ஆம் ஆண்டு பிறந்த மோலி கிப்சனின் சாதனையை முறியடித்துள்ளது. அக்டோபர் 31ஆம் தேதி பிறந்த இரட்டை குழந்தைகளான ரேச்சல் ரிட்ஜ்வே மற்றும் பிலிப் ரிட்ஜ்வே ஆகிய தம்பதிக்கு பிறந்த இருவரும்தான் ’’உலகிலேயே வயதான குழந்தைகள் (world's oldest babies)’’ எனக் கூறப்பட்டுள்ளனர்.

இரட்டை குழந்தைகளான லிடியா மற்றும் திமோத்தி ரிட்ஜ்வே இருவரும்தான் நீண்டநாட்கள் உறையவைக்கப்பட்டு பிறப்பிக்கப்பட்ட குழந்தைகள் என்கிறது தேசிய கருமுட்டை தான மையம். பெண்குழந்தை லிடியா பிறக்கும்போது 2.5 கிலோ எடையுடனும், திமோத்தி 2.9 கிலோ எடையுடனும் இருந்ததாகவும் கூறியிருக்கிறது.

செயற்கை முறை கருத்தரித்தல் (IVF) மூலம் வெற்றிகரமாக குழந்தைகளைப் பெற்றெடுத்த பெற்றோர்கள், கூடுதல் கருக்களை தானம் செய்ததன் விளைவாக பிறப்பிக்கப்பட்ட குழந்தைகள் இவர்கள். 30 வருடங்களுக்கு முன்பு, செயற்கை முறை கருத்தரித்தல் மூலம் குழந்தை பெற்றெடுத்த தம்பதியர், 1992ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி பூஜ்ஜியத்திற்குக் கீழே 200 டிகிரியில் cryopreserve செய்து வைத்திருந்த கருமுட்டைகளை தற்போது தானமாக வழங்கினர்.

2007 வரை வெஸ்ட் கோஸ்ட் கருவுறுதல் ஆய்வகத்தில் இந்த முட்டைகள் பாதுகாக்கப்பட்டன. பின்னர் அந்த தம்பதியர் முட்டைகளை தேசிய கருமுட்டை தான மையத்தில் தானமாக வழங்கினர். 15 வருடங்களுக்கு பிறகு தற்போது அந்த கருமுட்டைகளிலிருந்து லிடியா மற்றும் திமோத்தி இருவரும் வந்துள்ளனர்.

ரிட்ஜ்வே தம்பதியருக்கு ஏற்கெனவே 8,6,3 மற்றும் கிட்டத்தட்ட 2 வயதில் நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தானம் பெறப்பட்ட கருமுட்டையிலிருந்து குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்த தம்பதியர், ’’சிறப்பு கரு’’விற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். அதாவது பெறுநர்களை கண்டறிவதில் சிரமம் உள்ள கருமுட்டைகளை தேர்வு செய்தனர்.

இதுகுறித்து ரிட்ஜ்வே கூறுகையில், ”உலகிலேயே அதிக நாட்கள் பதப்படுத்தப்பட்ட முட்டைகளை நாங்கள் தேடவில்லை. நீண்டகாலமாக காத்திருந்த உயிர்களையே தேடினோம். இதில் மனதை கவர்ந்த விஷயம் என்னவென்றால், அவர்கள் எங்களுடைய சிறிய குழந்தைகள் என்றாலும், அவர்கள்தான் எங்களுடைய மூத்த குழந்தைகள். லிடியா மற்றும் திமோத்திக்கு கடவுள் உயிர் கொடுத்தபோது நான் 5 வயதாக இருந்தேன். அன்றிலிருந்து கடவுள் இந்த உயிர்களை காப்பாற்றி வந்துள்ளார்” என்கிறார்.

ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி, கருவுறுதல் நிபுணர் எலன் எஸ். கிளேசர் கூறுகையில், ’’இங்கு ஐவிஎஃப் முறையில் உருவாக்கப்பட்ட கருக்கள் கணக்கிலடங்காதவை. அவற்றின் வாழ்க்கை 5 வகைகளில் செல்கிறது.

1. கருவை அப்புறப்படுத்தலாம்
2. தம்பதியினர் கூடுதல் குழந்தைகளை பெற்றுக்கொள்ள முடிவு செய்யலாம்
3. கருக்களை அறிவியலுக்கு தானம் செய்யலாம்
4. கருக்களை மற்றொரு நபர் அல்லது தம்பதியருக்கு தானம் செய்யலாம்
5. முடிவெடுக்க வேண்டாம் என்றுகூட முடிவு செய்யலாம்’’ என்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com