குயின் எலிசபெத்தின் மறைவுக்கு பிறகு பிரிட்டன் அரசில் வரப்போகும் மாற்றங்கள் என்ன தெரியுமா?

குயின் எலிசபெத்தின் மறைவுக்கு பிறகு பிரிட்டன் அரசில் வரப்போகும் மாற்றங்கள் என்ன தெரியுமா?
குயின் எலிசபெத்தின் மறைவுக்கு பிறகு பிரிட்டன் அரசில் வரப்போகும் மாற்றங்கள் என்ன தெரியுமா?
Published on

70 ஆண்டு காலமாக பிரிட்டன் நாட்டின் ராணியாக ஆட்சி புரிந்த இரண்டாம் குயின் எலிசபெத் கடந்த செப்டம்பர் 8ம் தேதி தனது 96வது வயதில் காலமானார். இதனை பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரபூர்வமாகவே அறிவித்தது. 

ராணி எலிசபெத்தின் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் தொடங்கி பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் ராணியின் மறைவுக்கு பிறகு மூன்றாம் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில் குயின் எலிசபெத்தின் மறைவுக்கு பிறகு தங்களது பாஸ்போர்ட் செல்லுமா என பிரிட்டன்வாசிகள் ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அதன்படி பயனர் ஒருவர், “ராணியின் மறவையடுத்து பாஸ்போர்ட்ஸ் செல்லுமா அல்லது மாறுமா?” என ட்வீட் செய்திருக்கிறார்.

அதேபோல, ”ராணி தற்போது இறந்துவிட்டார். அப்போது பாஸ்போர்ட் மாற்றப்பட வேண்டியது அவசியமா? ஏனெனில் இதுநாள் வரை எலிசபெத்தின் ஆட்சியின் கீழ் இருந்ததாகவே பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது” எனக் கேட்கப்பட்டிருக்கிறது.

மூன்றாம் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராக அறிவிக்கப்பட்டதால் எதிர்காலத்தில் மாற்றப்படும் என்றாலும், பாஸ்போர்ட்டின் காலாவதி தேதி முடிந்த பின்னரே புதுப்பிக்கப்பட வேண்டும். 

ALSO READ: 

அதேபோல பிரிட்டனின் நாணயம், முத்திரை போன்றவையும் இரண்டாம் எலிசபெத் மறைந்ததால் மூன்றாம் சார்லஸின் பேரில் புதுப்பிக்கப்படும். இதுபோக ”God Save the Queen” என்பதாக இருந்த பிரிட்டனின் தேசிய கீதம் இனி "God Save the King" ஆக மாற்றப்படும். 

முன்னதாக, தன்னுடைய பெயரிலேயே பாஸ்போர்ட் வழங்கப்பட்டதால் இதுநாள் வரையில் குயின் எலிசபெத்திற்கு பாஸ்போர்ட்டே இருந்ததில்லை. இருப்பினும் அரச குடும்பத்தைச் சேர்ந்த ராணியின் முன்னாள் கணவர் ஈடின்பெர்க் உட்பட அனைவருக்குமே பாஸ்போர்ட் முக்கியமானதாக இருந்தது. இனி பிரிட்டனின் மன்னராக போகும் மூன்றாம் சார்லஸும் பாஸ்போர்ட் இல்லாமலேயே வலம் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com