"பச்சை மீன்கள், மழை நீர் மட்டுமே உணவு"- பசிபிக் கடலில் சிக்கி 2 மாதங்கள் உயிர்பிழைத்து வாழ்ந்த நபர்!

ஆஸ்திரேலிய மாலுமி ஒருவர் பசிபிக் பெருங்கடலில் பச்சை மீன்களை உட்கொண்டும் மழைநீரை குடித்துக்கொண்டும் இரு மாதங்கள் கடலில் உயிர்பிழைத்த நிகழ்வு நடந்துள்ளது.
australian sailor
australian sailorptweb
Published on

சிட்னியில் வசிக்கும் 51 வயதான டிம் ஷெடாக் தனது வளர்ப்பு நாயான பெல்லாவுடன் பிரெஞ்சு பாலீசீனியாவிற்கு செல்ல மெக்ஸிகோவில் இருந்து கடந்த ஏப்ரல் மாதத்தில் கிளம்பியுள்ளார். மெக்சிகோவின் லா பாஸ் நகரிலிருந்து 6,000 கிமீ நீளமான (3,728 மைல்) பயணத்தைத் தொடங்கிய ஷெடாக்கின் படகு மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டது. புயலில் படகின் எலக்டானிக் சாதனங்கள் சேதமடைந்ததால் மேலே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. சில வாரங்கள் கடலிலேயே சிக்கி இருந்த அவர்களை, இந்த வாரம் ஒரு ஹெலிகாப்டர் கண்டடைந்தது. இதன் பின் இழுவை படகு மூலம் அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

அவரை மீட்ட போது அவர் மிகவும் மெலிந்தும், நீண்ட நாட்களாக வளர்ந்த தாடியுடன் காணப்பட்டார். இது ஷெடாக் கூறுகையில், “நான் கடலில் மிக மோசமான சூழ்நிலையை அனுபவித்துள்ளேன். நான் நீண்ட காலமாக கடலில் தனியாக இருந்தேன். எனக்கு ஓய்வு மற்றும் நல்ல உணவு தேவை, மற்றபடி நான் நல்ல உடல்நிலையுடன் இருக்கிறேன்” என்றார்.

கடலில் இருந்த காலம் குறித்து அவர் கூறுகையில், “மீன்பிடி சாதனங்களே தான் உயிர் வாழ உதவியது” எனத் தெரிவித்துள்ளார். மேலும் படகில் இருந்த விதானத்தின் (வெயிலில் இருந்து காத்துக்கொள்ள பயன்படும் தார்பாய் போன்ற பொருள்) அடியில் தங்கி இருந்ததால் என்னால் வெயிலில் இருந்து தப்பிக்க முடிந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

அவரால் சிறிதளவு உணவை உட்கொள்ள முடிகிறது என அவரை மீட்டவர்கள் தெரிவிக்கின்றனர். அவரை மீட்ட இழுவை படகு மூலம் அவர் மீண்டும் மெக்ஸிகோவிற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com