அரிய வகை மூச்சுத்திணறல், நுரையீரல் பாதிப்பால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் உண்மைக் காரணத்தைக் கண்டறிந்தபோது அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் கடுமையான மார்பு வலியுடன் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். நோயாளியின் முகம் வீங்கியிருப்பதை கவனித்த மருத்துவர்கள் அவர் சுவாசிக்கும்போது தனித்துவமான சத்தம் கேட்பதையும் கண்டறிந்தனர். மருத்துவர்கள் செய்த பரிசோதனையில் அவருக்கு தீவிர மூச்சுத்திணறல் ஏற்பட்டு நுரையீரலில் காற்றறைகள் கிழியும் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. செயற்கை சுவாசத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர், மேற்சிகிச்சைக்காக இளைஞரிடம் எவ்வாறு மூச்சுத்திணறல் ஏற்பட்டது என்பது குறித்து விசாரித்தனர். அப்போது அவர் கூறிய காரணம்தான் மருத்துவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
20 வயதான அந்த இளைஞர் படுக்கையில் படுத்தபடி சுய இன்பம் செய்து கொண்டிருந்தபோது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு இந்த நிலைக்கு தள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார். அதன்பின்னர் தான் இளைஞருக்கு “நிமோமெடியாஸ்டினம்” எனப்படும் ஒரு அரிய நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தனர். நுரையீரல் அல்லது உணவுக்குழாயில் ஏற்படும் உடல் ரீதியான அதிர்ச்சியால் நிமோமெடியாஸ்டினம் (pneumomediastinum) ஏற்படலாம். மார்பு குழிக்குள் அழுத்தம் திடீரென அதிகரிப்பதால் நுரையீரலில் உள்ள காற்றுப் பைகள் சேதமடைந்து அதிக அளவு ஆக்ஸிஜன் தேவைப்படும் நிலை உருவாகும்.
இந்த வகையான காயம் இளைஞர்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது, கடுமையான ஆஸ்துமா தாக்குதல், கடுமையான உடற்பயிற்சி அல்லது வாந்தி ஆகியவை நிமோமெடியாஸ்டினம் ஏற்பட வழிவகுக்கும். மருத்துவர்கள் வெளியிட்ட அறிக்கையில், நிமோமெடியாஸ்டினத்தின் இந்த நிகழ்வு அசாதாரணமானது என்று குறிப்பிட்டுள்ளனர். ஏனெனில் இது சுயஇன்பத்தால் ஏற்பட்ட “நிமோமெடியாஸ்டினம்” இதற்கு முன்பு கேள்விப்படாதது. அதிர்ஷ்டவசமாக, அந்த இளைஞர் விரைவாக குணமடைந்து நான்கு நாட்களுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.