மெக்காவின்‌ முதல் புகைப்படம் இந்திய மதிப்பில் ரூ.2 கோடிக்கு ஏலம்!

மெக்காவின்‌ முதல் புகைப்படம் இந்திய மதிப்பில் ரூ.2 கோடிக்கு ஏலம்!
மெக்காவின்‌ முதல் புகைப்படம் இந்திய மதிப்பில் ரூ.2 கோடிக்கு ஏலம்!
Published on

இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவின் முதல் புகைப்படம் இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. 

பின்லாந்தைச் சேர்ந்த கிறிஸ்டியன்‌ ஸ்னோக் ஹர்‌ஹொன்ஜ்‌ என்பவர் மெக்காவைப் பற்றியும், அங்கு வாழும் மக்களைப் பற்றியும் 1880 காலகட்டங்களில் ஆய்வு செய்தார். தான் சேகரித்த தகவல்களை தொகுத்து 1889ம் ஆண்டு ஒரு புத்தகம் ஒன்றை எழுதினார். இந்த புத்தகத்திற்காக மெக்காவை முதன்முதலில் அப்துல்கபார் என்பவர் புகைப்படம் எடுத்திருந்தார். 

இந்நிலையில் அப்துல்கபார் எடுத்த மெக்காவின் முதல் புகைப்படம், இந்தோனேசியாவில் தற்போது ஏலம் விடப்பட்டது. இந்திய மதிப்பில் சுமார் 2கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.  மேலும் அப்துல்கபார் எடுத்த பல புகைப்படங்கள் நெதர்லாந்தில் உள்ள லைடென் பல்கலைக்கழக நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

புனித தலமான மெக்கா, சவூதி அரேபியாவின் மக்கா மாகாணத்தில் வரலாற்றுப் பழமை வாய்ந்த ஹிஜாஸ் பகுதியில் அமைந்துள்ளது. வருடத்துக்கு சுமார் 15 மில்லியனுக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் மெக்காவுக்கு வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com