இந்தியாவின் ஆந்திர காவல்நிலைய கணினிகள் முதல் இங்கிலாந்தின் மருத்துவமனை கணினிகள் வரை 100 க்கும் மேறப்பட்ட நாடுகளை இந்த கொடுமையான ரான்சம்வேர் கணினி வைரஸ் பாதித்துள்ளது.
சில நாட்களில் 100 க்கும் மேற்ப்பட்ட நாடுகளில் உள்ள கணினிகளை தாக்கியுள்ளது இந்த ரான்சம்வேர் வைரஸ்.
இந்தியாவின் ஆந்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சித்தூர், கிருஷ்ணா, குண்டூர், விசாகப்பட்டிணம் மற்றும் ஸ்ரீககுளம் ஆகிய நகரங்களில் உள்ள 18 காவல் நிலையங்களில் உள்ள கணினிகளை ரான்சம்வேர் வைரஸ் தாக்கியுள்ளது. ஆந்திர காவல்துறை டிஜிபி சாம்பசிவ ராவ் கூறுகையில், விண்டோஸ் ஆப்ரேடிங் சிஸ்டம் உள்ள கணினிகளே பாதிக்கப்பட்டுள்ளன், ஆப்பில்-ன் ஐஓஎஸ் உள்ள கணினிகள் எந்த பாதிப்பும் அடையவில்லை என்று கூறினார்.
உலகின் பல நாடுகளில் உள்ள அரசு துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் கணினிகள் பாதிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, இங்கிலாந்தின் தேசிய மருத்துவமனை, ரஷ்யாவின் உள்துறை அமைச்சகம், ஸ்பெயினின் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அமெரிக்காவின் பல நிறுவனங்கள் ரான்சம்வேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவின் உள்துறை அமைச்சகத்தின் 1000-க்கும் மேறபட்ட கணினிகள் இந்த வைரஸால் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கேஸ்பர் ஸ்கை என்ற ஆண்டி வைரஸ் மென்பொருள் உருவாக்கும் நிறுவனம், 74 நாடுகளில் 45,000-க்கும் மேற்ப்பட்ட கணினிகள் ரான்சம்வேர் வைரஸால் பாதிப்படைந்துள்ளதாக கூறியுள்ளது.
விண்டோஸ் 8, எக்ஸ்பி, சர்வர் 2003 போன்ற பழைய ஆப்ரேடிங் சிஸ்டம் உள்ள கணினிகள் பாதிப்படைந்தால் எங்களால் எந்த உதவியும் செய்ய முடியாது. அனைவரும் புதிய ஆப்ரேடிங் சிஸ்டமை அப்டேட் செய்து கொள்வது நல்லது என்று விண்டோஸ் நிறுவனம் கூறியுள்ளது.
ரான்சம்வேர் வைரஸை முடக்கி, கணினியை மீட்டெடுக்க அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பான ஹோம்லேண்ட் செக்யூரிட்டி தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
மே 12,13 ஆம் தேதிகளில் ஜி7 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் வங்கிகளின் நிர்வாகிகள் இத்தாலியில் கூடி ரான்சம்வேர் வைரஸ் குறித்து விவாதித்தது குறிப்பிடத்தக்கது.