நாயின் தாக்குதலில் இருந்து தனது சகோதரியைக் காப்பாற்றிய சிறுவனை உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவர்கள் எப்படி ரக்ஷாபந்தனை கொண்டாடினார்கள் என்பதை பார்க்கலாம்.
நாயின் தாக்குதலில் இருந்து தனது சிறிய சகோதரியை துணிச்சலாக காப்பாற்றிய சூப்பர் ஹீரோ பிரிட்ஜரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். ஆறு வயதான பிரிட்ஜர் தனது இளைய சகோதரியை நாயின் தாக்குதலில் இருந்து தனது உயிரை பணயம் வைத்து காப்பாற்றினார். பிரிட்ஜரின் இந்த தன்னலமற்ற செயல், அவர் தனது சகோதரிமீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்தியது. இந்த துணிச்சலான சிறுவனின் செயல் சமூக ஊடகங்களில் பரவியது. இந்நிலையில் பிரிட்ஜரும் அவரது சகோதரியும் இந்த ஆண்டு ரக்ஷாபந்தன் பண்டிகையை எப்படி கொண்டாடினார்கள் என்று பிரிட்ஜின் அத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அதில் பிரிட்ஜரின் துணிச்சலான இந்த செயல் உலகெங்கிலும் உள்ள மக்களிடையே வெகுவாக பரவியதோடு மெக்ஸிகோ, பிரேசில், அயர்லாந்து, ஈரான், தென்னாப்பிரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலும் வெகுவாக பரவியுள்ளது. இந்த செயலால் எங்களுடைய புதிய தொடர்புகள் எல்லை கடந்து சென்றன. ஒரு சகோதரர் தனது சகோதரிமீது வைத்துள்ள அன்பு நம்மை ஒன்றிணைக்கிறது, என்று நிக்கி வாக்கர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
(பிரிட்ஜருக்கு ராக்கி கட்டும் சகோதரி)
அண்மையில் கொண்டாடப்பட்ட ரக்ஷா பந்தனைப் பற்றி தனது குடும்பம் எவ்வாறு கற்றுக்கொண்டது என்றும் இந்த பண்டிகை எதைக்குறிக்கிறது என்றும் அவர் விளக்குகிறார். இத்துடன் சிறிய சகோதரி தனது பெரிய சகோதரனின் மணிக்கட்டில் ராக்கியைக் கட்டும் படத்தையும் இணைத்துள்ளார்.