வட கொரியா சமீபத்தில் நடத்திய அணு ஆயுதச் சோதனையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
வட கொரியா அண்மையில் அணுசக்தி சோதனையை புங்யி-ரி என்ற இடத்தில் நிலத்திற்கு அடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. புங்யி-ரி மலைப்பகுதி சீனா-வட கொரிய எல்லையில் அமைந்துள்ளது. இந்த சோதனையால் மலைப்பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாக செயற்கை கோள் படங்கள் காட்டுகின்றன. நில அதிர்வு, ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இது போன்று தொடர்ந்து மீண்டும் மீண்டும் சோதனைகள் நடத்தப்பட்டால், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு, மலை பாறைகள் சரியும் அபாயம் ஏற்படும் என்று சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.