இளவரசர் ஹாரி மற்று மேகன் மார்கல் எழுப்பிய நிற பேதம் குறித்த குற்றச்சாட்டு கவலையளிப்பதாக இங்கிலாந்து ராணி எலிசபெத் தெரிவித்துள்ளார். இதை சரி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஓபரா வின்ப்ரேவுக்கு அளித்த பேட்டியில் ஹாரியும், மேகன் மார்கலும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர். அரச குடும்ப வாழ்கையை துறந்தது குறித்த அந்த பேட்டியில் அவர்களுக்கு பிறக்கவிருக்கும் குழந்தையின் தோலின் நிறம் குறித்து அரச குடும்பத்தில் விமர்சனங்கள் எழுந்ததாக குற்றம்சாட்டினர். மேலும் அரண்மனை வாழ்க்கை குறித்து பல்வேறு விமர்சனங்களையும் மேகன் மார்கல் முன்வைத்திருந்தார்.
இது தொடர்பாக இதுவரை மவுனம் காத்துவந்த இங்கிலாந்து அரச குடும்பம், அவர்கள் இருவரும் தெரிவித்த கருத்துகள் கவலையளிப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த சில வருடங்கள் ஹாரிக்கும் மேகனும் மிகவும் சவாலானதாக அமைந்ததை அறிந்து முழு குடும்பமும் வருந்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.