அக்டோபர் மாதம் 14ஆம் தேதி வரை பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்க ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசும் போது, ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதி என தெரிவித்திருந்தார். அத்துடன் பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்குவதற்கு இரண்டாம் எலிசபெத் ராணியிடம் ஒப்புதல் கேட்டிருந்தார்.
இந்நிலையில் பிரிட்டன் நாடாளுமன்றத்தை அக்டோடபர் 14ஆம் தேதி வரை முடக்க பிரிட்டன் பிரதமருக்கு இரண்டாம் எலிசபெத் ராணி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், செப்டம்பர் 9 முதல் 12 வரையிலும் மற்றும் அதைத்தொடர்ந்து அக்டோபர் 14ஆம் தேதி வரையிலும் பிரிட்டன் நாடாளுமன்றம் முடக்கப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது.