சார்லஸின் மனைவி 'ராணி' என அழைக்கப்பட வேண்டும் - ராணி எலிசபெத் விருப்பம்

சார்லஸின் மனைவி 'ராணி' என அழைக்கப்பட வேண்டும் - ராணி எலிசபெத் விருப்பம்
சார்லஸின் மனைவி 'ராணி' என அழைக்கப்பட வேண்டும் - ராணி எலிசபெத் விருப்பம்
Published on

இங்கிலாந்து அரசராக இளவரசர் சார்லஸ் பதவியேற்கும்போது அவரது மனைவி கமிலா, 'ராணி' என அழைக்கப்படவேண்டும் என்று  தனது விருப்பதை வெளிப்படுத்தியிருக்கிறார் ராணி எலிசபெத்.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், ஆட்சி பொறுப்பேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு 2022-ம் ஆண்டை பிளாட்டினம் ஜூபிலியாக, ராயல் அரண்மனை கொண்டாடி வருகிறது. இங்கிலாந்து ராணியின் 70 ஆண்டுகால ஆட்சியைக் கவுரவிக்கும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் மரங்களை நடவேண்டும் என இளவரசர் சார்லஸ் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், இங்கிலாந்து அரசராக இளவரசர் சார்லஸ் பதவியேற்கும்போது அவரது மனைவி கமிலா, 'ராணி' என அழைக்கப்படவேண்டும் என்று பதவியேற்று 70ஆவது ஆண்டுகள் ஆனதையொட்டி வெளியிட்ட செய்தியில் ராணி எலிசபெத் தனது விருப்பதை வெளிப்படுத்தினார்.

இதையும் படிக்க: பெய்ஜிங் ஒலிம்பிக் - நேரலை செய்து கொண்டிருந்த நிருபரை வெளியே தள்ளிய பாதுகாப்பாளர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com