விமானத்தில் திடீரென ஒளிப்பரப்பான ஆபாசப்படம்.. 1 மணி நேரமாக நிறுத்த முடியாததால் பயணிகள் அதிர்ச்சி!

ஜப்பான் சென்றுகொண்டிருந்த விமானம் ஒன்றின் திரைகளில் திடீரென ஆபாசப்படம் ஒளிப்பரப்பானதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
ஜப்பான்
ஜப்பான் முகநூல்
Published on

ஜப்பான் சென்றுகொண்டிருந்த விமானம் ஒன்றின் திரைகளில் திடீரென ஆபாசப்படம் ஒளிப்பரப்பானதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

சமீபத்தில் ஆஸ்திரேலியா சிட்னியிலிருந்து ஜப்பானின் ஹனேடா நகரை நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்தது குவாண்டாஸ் விமானம்.. விமானங்களில் பொதுவாகவே பயணிகளின் இருக்கைகளுக்கு முன்புறம் பொழுதுபோக்கிற்காக திரைகள் வைக்கப்படுவது வழக்கம்.. அப்படித்தான்,குவாண்டாஸ் விமானத்தில் வைக்கப்பட்டிருந்த திரைகளில் பொதுபோக்கு நிகழ்ச்சிகளை கண்டு வந்துள்ளனர் பயணிகள்..

அப்போது தீடீரென விமானத்தில் வைக்கப்பட்டிருந்த அனைத்து திரைகளிலும் ஆபாசப்படங்கள் ஒளிப்பரப்பாக ஆரம்பித்துள்ளது.. இதனால், அதிர்ச்சியடைந்த பயணிகள் அதை நிறுத்துவதற்கு முற்பட்டுள்ளனர்..ஆனால், அதை ஆஃப் செய்யவும் முடியாமல் போனதால், பலருக்கு பெரும் அசவுகரியத்தை ஏற்படுத்தியதாக அச்சூழல் மாறியுள்ளது. இப்படியான சூழலில், கிட்டதட்ட 1 மணி நேரமாக ஆபாசப்படம் ஒளிப்பரப்பட்டுள்ளது.

ஜப்பான்
காதலரிடம் ஆலோசனை.. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த 13 உறவினர்களை விஷம் வைத்துக் கொன்ற பாகி. சிறுமி!

இந்நிலையில், இது குறித்து விமான ஊழியர்களிடத்தில் தகவல் தெரிவிக்கையில், பொழுது போக்கு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பபழுதுதான் காரணம் என்று ஊழியர்கள் விளக்கமளித்துள்ளனர்.

இத்தகைய சூழலில் , விமானத்தில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக பயணிகள் அனைவரிடத்திலும் குவாண்டாஸ் நிறுவனம் மன்னிப்பு தெரிவித்துள்ளது.. மேலும், இதுப்போல சம்பவம் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக, அதில் பயணித்த சிலபயணிகள் இணையத்தில் தெரிவித்ததை அடுத்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com