குடல் புற்றுநோயை தடுக்கும் உருளைக்கிழங்கு: ஆய்வில் கண்டுபிடிப்பு

குடல் புற்றுநோயை தடுக்கும் உருளைக்கிழங்கு: ஆய்வில் கண்டுபிடிப்பு
குடல் புற்றுநோயை தடுக்கும் உருளைக்கிழங்கு: ஆய்வில் கண்டுபிடிப்பு
Published on

ஊதா நிற உருளைக்கிழங்கு, வண்ணமயான பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதால் பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய் மற்றும் குடல் அழற்சி நோயை தடுக்க முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாண பல்கலைக்கழக இணை பேராசிரியரும், இந்தியருமான ஜெய்ராம் வனமாலா குழுவினர் இதனை கண்டுபிடித்துள்ளனர். இறைச்சி சார்ந்த உணவுமுறைகளை விட, உருளைக்கிழங்கு, பல்வேறு வகையான பழங்கள், நார்சத்து மிகுந்த கீரை வகைகளை உண்பது அதிக அளவிலான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். அதிலும் ஊதா வண்ணம் கொண்ட ‌உருளைக்கிழங்கில் குடல் புற்றுநோயை தடுப்பதற்கான காரணிகள் அதிக அளவில் இடம் பெற்றிருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com