இதனை வீடியோவாக பதிவு செய்தவர் டார்னெல்லா ஃபிரேசியர் என்ற இளம்பெண். அப்போது அவருக்கு வயது 17. ஜார்ஜ் ஃபிளாய்டின் கொலை வெளி உலகிற்கு தெரிய மிக முக்கிய காரணம் அந்த வீடியோ தான். உலகம் முழுவதும் பரவிய வீடியோவால் பலரும் காவல் அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்தனர். அமெரிக்காவில் போராட்டம் வெடித்தது. போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் பணி நீக்கம் செய்யப்பட்டார். வழக்கு விசாரணை முடிந்து தண்டனையும் கிடைத்துள்ளது.
இந்நிலையில் அந்த வீடியோவை பதிவு செய்த இளம்பெண் டார்னெல்லா ஃபிரேசியருக்கு உலகின் உயரிய கவுரவம் என கருதப்படும் புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புலிட்சர் விருது 1917ஆம் ஆண்டு முதல் ஊடகம், இலக்கியம், இசை ஆகிய துறைகளுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் டார்னெல்லா ஃபிரேசியர் ஊடக பிரிவில் புலிட்சர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.