ப்யூர்டோ ரிகோவை புரட்டிப் போட்ட மரியா புயல் காரணமாக அந்த தீவின் மக்கள் தொகை 14 சதவிகிதம் வரை சரிந்திருப்பதாக புதிய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
கரீபியன் தீவுகளை மிரட்டி வந்த மரியா புயல் கடந்த செப்டம்பர் மாதம் ப்யூர்டோ ரிகோவை தாக்கியது. மரியா புயலால் ப்யூர்டோ ரிகோவிம் முழுத்தீவும் சின்னாபின்னமானது இதில் சுமார் 51 பேர் உயிரிழந்தனர். ஏராளமான வீடுகள் சேதமடைந்ததால், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். தற்போது அங்கு நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தாலும், மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப பல மாதங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது. இந்த சூழலில் மரியா புயலின் கோரத் தாண்டவத்தால் ஏராளமானோர் உயிருக்கு அஞ்சி அந்த தீவில் இருந்து புலம்பெயர்ந்துள்ளனர். இதன் காரணமாக அந்தத் தீவின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 14 சதவிகிதம் அளவுக்கு சரிந்திருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.