கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வரும் 1ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என ஆஸ்திரியா அரசு அறிவித்துள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 10 ஆயிரம் பேர் பேரணியாக சென்று அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று 25 லட்சம் மக்களை ஆஸ்திரியா அரசு வற்புறுத்த முடியாது என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.