கொரோனா சூறாவளியால் வேலையிழப்பு - அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு எச்1பி விசா சிக்கல் !

கொரோனா சூறாவளியால் வேலையிழப்பு - அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு எச்1பி விசா சிக்கல் !
கொரோனா சூறாவளியால் வேலையிழப்பு - அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு எச்1பி விசா சிக்கல் !
Published on

அமெரிக்காவில் உள்ள 2 லட்சம் இந்தியர்கள் அங்கு வசிப்பதற்கான சட்ட ரீதியான உரிமையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எச்1பி விசாவை பயன்படுத்தி அமெரிக்காவில் இருப்பவர்கள் தொடர்ந்து 2 மாதத்திற்கு மேல் ஊதியம் இன்றி இல்லாமல் இருந்தால் அவர்கள் அங்கு தங்கியிருப்பதற்றான உரிமையை இழப்பார்கள். கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் பலரும் ஊதியம் இன்றி இருக்கின்றனர்.

இதனால் எச்1பி விசா பெற்றவர்கள் அமெரிக்காவில் வசிப்பதற்கான அங்கீகாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் வெளியேறினால் பாதிப்புகள் ஏற்படும் என ஆப்பிள் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் அந்நாட்டு அரசிடம் முறையிட்டுள்ளன. இதற்கு அரசு எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை. அமெரிக்க அரசு விதிவிலக்கு எதுவும் அளிக்காத பட்சத்தில் 2 லட்சம் இந்தியர்களின் தாயகம் திரும்பும் நிலைக்கு ஆளாவார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com