இலங்கை: அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு - தனியார் போக்குவரத்துகள் முடங்கும் அபாயம்

இலங்கை: அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு - தனியார் போக்குவரத்துகள் முடங்கும் அபாயம்
இலங்கை: அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு - தனியார் போக்குவரத்துகள் முடங்கும் அபாயம்
Published on

இலங்கையில் அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாட்டால் அடுத்த வாரம் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகள் முழுமையாக முடங்கக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் டீசல் தட்டுப்பாடு காரணமாக, அடுத்த வாரத்தில் தனியார் பேருந்து சேவை முழுமையாக முடங்கக்கூடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்துச் சபையினால் தனியார் போக்குவரத்து சேவைக்கு வழங்கப்படும் டீசல் தற்போது பற்றாக்குறையாக உள்ளது. இது போதுமானதாக இல்லை. டீசல் இன்மையால், இன்றைய தினம் பெருமளவான பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை. நாளைய தினம் (ஞாயிறு) இந்த நிலைமை மேலும் தீவிரமடையும். எரிபொருள் வழங்கப்படாமையால், அடுத்த வாரம் தனியார் பேருந்து சேவை முழுமையாக முடங்கக்கூடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும தெரிவித்துள்ளார்.

இதேநேரம், அடுத்த வாரத்தில், பாடசாலை போக்குவரத்து சேவைகளும் தடைபடும் அபாயம் உள்ளதாக அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார். டீசலைப் பெற்றுக்கொள்வது மிகவும் சிரமமாக உள்ளது. இதன் காரணமாக பாடசாலை பேருந்து சேவையிலிருந்து பலர் விலகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஒட்டியப்பகுதிகளில் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு வரிசையில் நிற்பதை காணமுடிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com