காதலரை கரம்பிடித்தார் பிரிட்டன் இளவரசி யூஜினி

காதலரை கரம்பிடித்தார் பிரிட்டன் இளவரசி யூஜினி
காதலரை கரம்பிடித்தார் பிரிட்டன் இளவரசி யூஜினி
Published on

பிரிட்டன் இளவரசி யூஜினி, அவரது காதலர் ஜேக் ப்ரூக்பேங்ஸ் ஆகியோரது திருமணம் லண்டனின் வின்சர் கோட்டையில் இன்று கோலாகலமாக நடந்தது. 

பிரிட்டன் அரசு குடும்பத்தில் அரசி இரண்டாம் எலிசபெத்தின் பேத்தி, இளவரசர் ஆண்ட்ரூ - சாரா தம்பதியின் மகள் இளவரசி யூஜினி. முடிவரிசையில் யூஜினி 9-ஆவது இடத்தில் இருக்கிறார். ஜேக் ப்ரூக்பேங்க் என்ற இளைஞரை இளவரசி யூஜினி சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கின்போது சந்தித்தார். முதல் சந்திப்பிலேயே இருவரும் காதல் வயப்பட மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவில் ஒரு எரிமலைக்கு முன்பு இருவரும் தங்களது காதலைப் பரிமாறிக் கொண்டனர். இவர்கள் காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. 

இவர்களது திருமணம் பிரிட்டனின் வின்சர் கோட்டையின் ஜார்ஜ் தேவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் 850 பேர் பங்கேற்றனர். இவர்களை தவிர வின்சர் கோட்டைக்குள் சுமார் ஆயிரத்து 200 பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். மகாராணி இரண்டாம் எலிசபெத் அவரது கணவர் எடின்பரோ கோமன், இளவரசர் சார்லஸ், அவரது மகன்கள், மருமகள்கள், பேரக் குழந்தைகள் என அரச குடும்பத்தின் முக்கிமானவர்கள் அனைவரும் திருமணத்தில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள். திருமணம் முடிந்ததும் வின்சர் கோட்டையைச் சுற்றி குதிரை வண்டியில் மணமக்கள் ஊர்வலமாக வந்தார்கள். அரச தம்பதியை கண்ட மக்கள் ஆராவாராக் குரல் எழுப்பினர். 

பிரிட்டன் அரச குடும்பத் திருமணம் என்பதால் ‌சுமார் ரூ.40 கோடி செலவில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com