பிரதமர் மோடியும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும், தடுப்பூசி விவகாரம், ஆப்கானிஸ்தான் நிலவரம் உள்ளிட்டவை குறித்து தொலைபேசி வாயிலாக உரையாடினர்.
இரு தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்திய பயணிகள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என அண்மையில் பிரிட்டன் அரசு அறிவித்தது. இந்த நிலையில், பிரதமர் மோடியும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் தொலைபேசியில் பேசினர். கொரோனா தொற்று பரவலை ஒழிக்க இணைந்து பணியாற்றுவது, சர்வதேச பயணங்களை திறப்பது உள்ளிட்டவை குறித்து அப்போது பேசியதாக கூறப்படுகிறது. இதனிடையே, இரு நாடுகள் இடையே 2030ஆம் ஆண்டு வரையில் மேற்கொள்ளப்படும் முன்னேற்ற திட்டங்கள் மற்றும் பருவநிலை மாற்றம், ஆப்கானிஸ்தான் நிலவரம் உள்ளிட்ட சர்வதேச அணுகுமுறை குறித்தும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் உரையாற்றியதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.