வாஷிங்டனில் உள்ள ஆண்ட்ரூஸ் விமானப்படைத்தளத்தில் பிரதமர் மோடியை அமெரிக்க அரசு உயரதிகாரிகளும் இந்திய தூதர் தரண்ஜித் சிங் சாந்துவும் வரவேற்றனர். அமெரிக்க வாழ் இந்தியர்கள் பலரும் விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்றனர். இப்பயணத்தின் முதல் அலுவலாக துணை அதிபர் கமலா ஹாரிசை பிரதமர் சந்தித்து பேச உள்ளார். இதன் பின்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். இதன் தொடர்ச்சியாக இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகளின் கூட்டமைப்பான குவாட் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்கிறார். இதில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பிரதமர்கள் சந்தித்து பேச உள்ளனர்.