நிறுத்தி வைக்கப்பட்ட ஹெச்-1 பி விசா: ட்ரம்பின் உத்தரவால் 6 லட்சம் பேர் வேலை காலி ?

நிறுத்தி வைக்கப்பட்ட ஹெச்-1 பி விசா: ட்ரம்பின் உத்தரவால் 6 லட்சம் பேர் வேலை காலி ?
நிறுத்தி வைக்கப்பட்ட ஹெச்-1 பி விசா: ட்ரம்பின் உத்தரவால் 6 லட்சம் பேர் வேலை காலி ?
Published on

வெளிநாடுகளில் இருந்து வந்து அமெரிக்காவில் வேலை செய்வதற்காக வழங்கப்பட்டு வரும் விசாக்களை நடப்பாண்டின் இறுதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்து ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா தாக்குதலால் அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அமெரிக்காவை திக்குமுக்காட செய்துள்ளது. கொரோனாவால் அமெரிக்காவில் வேலையின்மையும் அதிகரித்துள்ளது. வரலாறு காணாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை அமெரிக்காவில் நிலவுகிறது. வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டுமென சில போராட்டங்களும் நடைபெற்றன. இந்நிலையில் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் விதமாக அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக வெளிநாட்டினருக்கான வாய்ப்புகளை குறைத்துவிட்டு உள்நாட்டு மக்களை பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதனால் வேலை வாய்ப்பு தொடர்பான விசாக்களுக்கு கடுமையான விதிமுறைகளை கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, வெளிநாடுகளில் இருந்து வந்து அமெரிக்காவில் வேலை செய்வதற்காக வழங்கப்பட்டு வரும் ஹெச் 1 பி விசாக்களை நடப்பாண்டின் இறுதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்து ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

ஹெச் 1 பி விசா மூலம் லட்சக்கணக்கான இந்தியர்கள் அமெரிக்காவில் வேலை பார்த்து வரும் சூழலில் அனைவரின் எதிர்காலமும் தற்போது கேள்விக்குறியாகி விடும் நிலை இருப்பதாக தெரிகிறது. அத்துடன், புதியதாக இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு வேலைக்கு செல்வது என்பது நடக்காத காரியம். இதுவும் இந்தியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com