கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் பயணத்தை இஸ்லாமியர்கள் ஒத்திவைக்கும்படி சவுதி அரேபியா அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், பல்வேறு நாடுகளில் உயிரிழப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதைத்தொடர்ந்து இஸ்லாமியர்கள் அதிகம் கூடும் மெக்காவில் நோய் தொற்று பரவுவதை தடுக்க சவுதி அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்கள் அதிக அளவில் கூடினால், கொரோனா எளிதில் பரவக்கூடும் என்பதால், கடந்த மாதம் உம்ரா பயணத்தை சவுதி அரசு ரத்து செய்தது.
இந்நிலையில், ஹஜ் பயணத்தையும் மேற்கொள்ள வேண்டாம் என அந்நாட்டின் அமைச்சர் முகமது பென்டன் வலியுறுத்தியுள்ளார். இந்த ஆண்டு ஜூலை இறுதியில் ஹஜ் புனித யாத்திரை தொடங்கவிருக்கும் நிலையில், அதனை இஸ்லாமியர்கள் ஒத்திவைக்க வேண்டும் என்றும் அமைச்சர் முகமது பென்டன் கேட்டுக் கொண்டுள்ளார்.