போர்ச்சுகல் பாரம்பரிய திருவிழா: ட்ரம்ப், கிம் கேளிக்கை உருவங்கள் அணிவகுப்பு

போர்ச்சுகல் பாரம்பரிய திருவிழா: ட்ரம்ப், கிம் கேளிக்கை உருவங்கள் அணிவகுப்பு
போர்ச்சுகல் பாரம்பரிய திருவிழா: ட்ரம்ப், கிம் கேளிக்கை உருவங்கள் அணிவகுப்பு
Published on

போர்ச்சுகல் நாட்டின் பாரம்பரியத் திருவிழாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உள்ளிட்ட தலைவர்களின் கேலிச் சித்திர வடிவிலான உருவங்களின் அணிவகுப்பு நடைபெற்றது. 

இந்தாண்டு அலைகள் மற்றும் கடலை மையமாக வைத்து Torres Vedras நகரில் பிரமாண்ட அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் டொனால்ட் ட்ரம்ப், பூமியின் பாதி பகுதியை கழிவறையாகp பயன்படுத்தி அமர்ந்திருப்பது போல கேளிக்கை உருவம் இடம்பெற்றது. வடகொரிய ‌அதிபர் கிம் எலி உடம்பும், கையில் ஏவுகணையுடனும் காட்சியளித்தார். 

சுறா மீன் உடம்புடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், கடல்கன்னி போல் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உள்ளிட்ட தலைவர்களின் வித்தியாசமான உருவ பொம்மைகள் அணிவகுப்பில் இடம்பெற்றன. அலைசறுக்கு விளையாடும் கால்பந்து வீரர்கள் ரொனால்டோ, மெஸ்ஸி உள்ளிட்ட பிரபலங்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com