கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டியில் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்கள் ட்விட்டரில் பரவி வருகிறது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. வெளிநாட்டு வாழ் தமிழர்களும் தங்கள் வீடுகளில் பொங்கல் பண்டிகையை சிறப்பான முறையில் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அங்கிருக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுடன் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடியுள்ளார்.
இந்த விழாவில், தமிழர்களின் உடையான வேட்டி, சட்டை அணிந்து, மஞ்சள், பூ, பானை என அனைத்து பொருட்களையும் வைத்து முறையாக பொங்கல் வைத்து கொண்டாடியுள்ளார். இந்தப் புகைப்படங்களை, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, தைப் பொங்கல் வாழ்த்துகள் என்றும் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பாரம்பரியத்தைக் கண்டு வியந்து, பிரதமர் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடியதாக கனடா அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் புகைப்படங்கள் நெட்டிசன்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.