அதன் நீட்சியாகவே தற்போது ட்விட்டர் அதன் தனியுரிமைக் கொள்கைகளை மீறியதற்காக சொல்லி, சில பத்திரிகையாளர்களின் அக்கவுண்ட்களைத் தடை செய்துள்ளதென்றும், பத்திரிகையாளர்களுக்கோ அல்லது வேறு எந்தக் அக்கவுண்டுகளுக்கோ விதிவிலக்கு அளிக்காது என்றும் தி வெர்ஜிடம் ட்விட்டர் தெரிவித்துள்ளது.
எலான் மஸ்க் ட்விட்டரில் சொன்னது என்ன?
ட்விட்டர் நிறுவனத்தை உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு மீட்கப்படுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. இந்த நிலையில், ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கை மீட்டெடுப்பது குறித்து எலான் மஸ்கே ட்விட்டரில் வாக்கெடுப்பை ஏற்படுத்தியிருந்தார். அதில், ஆம் என்பதற்கு 51.8 சதவிகிதத்தினர், இல்லையென 48.2 சதவிகிதத்தினர் என 1 கோடியே 50 லட்சத்து 85,458 பேர் வாக்களித்திருக்கிறார்கள்.
இதனையடுத்து, “மக்களே பேசிவிட்டார்கள். ட்ரம்ப்பின் கணக்கு மீட்டெடுக்கப்படும். மக்களின் குரலே கடவுளின் குரல் (Vox Populi, Vox Dei)” என லத்தீன் மொழியில் எலான் மஸ்க் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதன்படி, டொனால்ட் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்கு பிறகு மீட்டெடுக்கப்பட்டதை அடுத்து, ட்ரம்புக்கு தற்போது வரை 10 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்ஸ் சேர்ந்திருக்கிறார்கள்.