செனகல் நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளதால் அடிக்கடி அமளி நடந்து வருகிறது.
நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்றம் கூடியபோது வழக்கம்போல ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்க்கட்சி எம்பி மஸாட்டா சாம்ப், ஆளுங் கூட்டணியைச் சேர்ந்த பெண் எம்பி ஏமி டியாவை அவரது இருக்கைக்கே சென்று தாக்கினார். இதனால் எம்பிக்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.