பிரதமர் மோடிக்கு ரஷ்ய நாட்டின் மிக உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. 2 நாட்கள் அரசுமுறைப் பயணமாக ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் புதினை சந்தித்து இருநாட்டு நல்லுறவு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
பயணத்தின் முடிவில், பிரதமர் மோடிக்கு ரஷ்ய குடிமகனுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான "ஆர்டர் ஆப் செயிண்ட் ஆண்ட்ரூ" (Order of St. Andrew) விருதை புதின் வழங்கினார். இருநாட்டு நல்லுறவை மேம்படுத்துவதற்காக சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட மோடி, "இந்த விருது எனக்கானது அல்ல, 140 கோடி இந்தியர்களுக்கானது. பல நூற்றாண்டுகளாக தொடரும் ஆழமான நட்புக்கு கிடைத்த விருது” என்று பெருமிதம் தெரிவித்தார்.