பாலின சமத்துவம், பருவநிலை மாற்றம் - ஜி 7 மாநாட்டில் இன்று பேசுகிறார் பிரதமர் மோடி!

பாலின சமத்துவம், பருவநிலை மாற்றம் - ஜி 7 மாநாட்டில் இன்று பேசுகிறார் பிரதமர் மோடி!
பாலின சமத்துவம், பருவநிலை மாற்றம் - ஜி 7 மாநாட்டில் இன்று பேசுகிறார் பிரதமர் மோடி!
Published on

ஜெர்மனியில் இன்று நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேசவுள்ளார்.

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் பங்கேற்றுள்ள ஜி - 7 மாநாடு நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட 7 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். மாநாட்டில், பல்வேறு அமர்வுகளாக விவாதம் நடந்தது. உக்ரைன்-ரஷ்யா போர் முக்கிய இடம் பிடித்தது. 7 நாடுகளின் தலைவர்களும் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தனர். உக்ரைன்-ரஷ்ய போரால் பாதிக்கப்பட்டுள்ள எரிபொருள் விநியோகத்தை சீரமைப்பது, பணவீக்க உயர்வை கட்டுப்படுத்துவது போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. இன்றைய நிகழ்வுகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

பருவநிலை மாற்றம், சுகாதாரம் ஆகியவை தொடர்பான ஒரு அமர்விலும், உணவு பாதுகாப்பு, பாலின சமத்துவம் ஆகியவை தொடர்பான ஒரு அமர்விலும் பிற தலைவர்களுடன் மோடி கலந்து கொள்கிறார். முன்னதாக ஜெர்மனியின் முனிச் நகரில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, உயிர்த்துடிப்புள்ள ஜனநாயகம் தான் இந்தியாவின் பெருமை என்று அவர் நேற்று கூறினார். கலாசாரம், உணவு, உடை, இசை மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றில் உள்ள பன்முகத்தன்மைதான் நமது ஜனநாயகத்தை துடிப்புடன் வைத்திருப்பதாகவும், இந்திய ஜனநாயக அரசியல் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி, அவசர நிலை எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து அர்ஜெண்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டசை சந்தித்த பிரதமர் மோடி, இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகள், அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் நடத்திய இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளை சேர்ந்த உயர்மட்டக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com