பிக்காசோவின் 'ஜன்னலில் அமர்ந்திருக்கும் பெண்' ஓவியம் நியூயார்க்கில் ரூ.758 கோடி (103 மில்லியன் டாலர்) க்கு ஏலம் பெறப்பட்டது.
நியூயார்க்கில் உள்ள கிறிஸ்டியின் ஏல மையத்தில் பப்லோ பிக்காசோவின் 'ஜன்னலில் அமர்ந்திருக்கும் பெண்' ஓவியம் 103.4 மில்லியன் டாலர்களுக்கு (சுமார் 758 கோடி ரூபாய்) விற்கப்பட்டது. ஏலம் ஆரம்பித்த 19 நிமிடங்களுக்குள் இந்த ஓவியம் விற்கப்பட்டதாக ஏல மையம் தெரிவித்துள்ளது. மறைந்த ஸ்பானிஷ் ஓவியரான பிக்காசோவின் ஐந்து படைப்புகள் 100 மில்லியன் டாலருக்கு அதிகமான தொகைக்கு விற்கப்பட்டுள்ளன.
பிக்காசோ 1881 இல் பிறந்து 1973-இல் உயிரிழந்தார். 1932 ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்பட்ட இந்த ஓவியம், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு லண்டன் ஏலத்தில் 28.6 மில்லியன் பவுண்டுகள் (சுமார் 44.8 மில்லியன் டாலர்களுக்கு) வாங்கப்பட்டது. இது தற்போதைய விலையை விட பாதிக்கும் குறைவானதாகும். கொரோனா நெருக்கடி சூழலிலும் இவ்வளவு அதிக தொகைக்கு ஏலம் பெறப்பட்டது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.