3 முறை பாலியல் பலாத்காரம் செய்யலாம்? பிலிப்பைன்ஸ் அதிபரின் சர்ச்சை பேச்சு

3 முறை பாலியல் பலாத்காரம் செய்யலாம்? பிலிப்பைன்ஸ் அதிபரின் சர்ச்சை பேச்சு
3 முறை பாலியல் பலாத்காரம் செய்யலாம்? பிலிப்பைன்ஸ் அதிபரின் சர்ச்சை பேச்சு
Published on

நீங்கள் 3 முறை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டால் அதை நான் அனுமதிப்பேன் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடர்டே நகைச்சுவையாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அவர்களை அழிப்பதற்காக அந்தப் பகுதியில் ராணுவ சட்டத்தை சில தினங்களுக்கு முன்னர் அமல்படுத்தி, அதிபர் ரோட்ரிகோ டியுடர்டே உத்தரவிட்டார்.

பொதுவாக ராணுவ சட்டம் அமலில் இருக்கிறபோது, ராணுவ வீரர்கள் பாலியல் பலாத்காரங்களில் ஈடுபடுவதாக புகார்கள் எழுவது உண்டு.

இந்த நிலையில், ராணுவ சட்டம் அமலில் உள்ள மின்டானவ் தீவில் ராணுவ முகாம் ஒன்றில் அதிபர் ரோட்ரிகோ டியுடர்டே பேசியதாவது, “நீங்கள் 3 முறை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டால் அதை நான் அனுமதிப்பேன். அதை நானே செய்ததாக கருதிக்கொள்வேன். நான் என்னையே சிறையில் அடைத்துக்கொள்வேன்” என தமாசாக குறிப்பிட்டார்.

அவரது பேச்சு சமூக வலைத்தளங்களில் பலத்த விமர்சனங்களுக்கும், கண்டனங்களுக்கும் உள்ளாகியுள்ளது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கிளிண்டனின் மகள் செல்சியா கிளிண்டன், “டியுடர்டே ஒரு கொலைகார குண்டன். அவருக்கு மனித உரிமைகள் பற்றி மரியாதை இல்லை. பாலியல் பலாத்காரம் என்பது ஒருபோதும் தமாஷ் அல்ல என்பதை சுட்டிக்காட்டுவது முக்கியம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com