நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் பொருட்களை சந்தையில் விளம்பரப்படுத்த பலவிதமான நூதன உத்திகளை கையாளும். அந்த வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பூச்சிக்கொல்லி நிறுவனத்தின் அறிவிப்பு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள The Pest Control Company, உங்கள் வீடுகளில் 30 நாட்களுக்கு 100 கரப்பான்பூச்சிகளை விட அனுமதித்தால் 2,000 அமெரிக்க டாலர்கள் (1.5 லட்சம் ரூபாய்) வழங்கப்படும் என அறிவித்து அதற்கு சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
இதன் மூலம் தாங்கள் தயாரிக்கும் பூச்சிக்கொல்லி மருந்து எப்படி வேலை செய்கிறது என அறிந்துக்கொள்ள முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த 30 நாட்களுக்கும் வேறு எந்த கரப்பான் கொல்லிகளையும் இந்த டாஸ்க்கை ஏற்கும் வீட்டு உரிமையாளர் பயன்படுத்தக் கூடாது என கூறியுள்ள பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனம், அந்த 30 நாட்களுக்குள் தங்களது பூச்சிக்கொல்லியால் கரப்பான்கள் ஒழியவில்லையென்றால் அது தொடர்பான தயாரிப்பை உண்ணிப்பாக மேற்கொள்வோம் எனவும் உறுதியளித்துள்ளது.
100 கரப்பான்களை வீட்டுக்குள் அனுமதிக்க The Pest Control விதித்துள்ள விதிகள் பின்வருமாறு:
1) போட்டியாளர் சொந்தமாக வீடு வைத்திருக்க வேண்டும் அல்லது வீட்டு உரிமையாளரிடம் இருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்
2) 21 வயதை கடந்தவராக இருக்க வேண்டும்.
3) யுனைட்டெட் ஸ்டேட்ஸ் அமெரிக்காவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
4) விதிக்கப்பட்ட 30 நாட்களில் வேறெந்த கரப்பான் கொல்லிகளையும் பயன்படுத்தக் கூடாது.
5) போட்டி முடிந்த பிறகு கரப்பான்கள் ஒழியாவிட்டால், இலவசமாக உங்கள் வீட்டில் உள்ள கரப்பான்களை பாரம்பரிய முறையில் ஒழித்துவிடுவோம்.
இவ்வாறு அந்த நிறுவனம் தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலானது நெட்டிசன்கள் இதற்கு முகம் சுழித்து வருகிறார்கள். ஆனால் அமெரிக்காவில் உள்ள கரப்பான்களை அழிப்பது என்பது சாத்தியமானதல்ல என பெஸ்ட் கண்ட்ரோம் நிறுவனம் கூறியுள்ளது.