நவாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக முஷாரப் அறிவித்த 23 கட்சிகளைக் கொண்ட மெகா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக மெகா கூட்டணி அமைத்திருப்பதாக முன்னாள் அதிபர் முஷாரப் அறிவித்துள்ள நிலையில், அந்தக் கூட்டணியில் இடம்பெறவில்லை என்று இரண்டு முக்கிய கட்சிகள் பல்டி அடித்துள்ளன.
ஆளும் கூட்டணிக்கு எதிராக தனது தலைமையில் 23 கட்சிகளைக் கொண்ட மெகா கூட்டணி உருவாகி இருப்பதாக முஷாரப் நேற்று அறிவித்திருந்தார். அந்தப் பட்டியலில் இருந்த பாகிஸ்தான் அவாமி தெரிக் மற்றும் மஜ்லிஸ் வதாத் இ முஸ்லிம் ஆகிய இரண்டு கட்சிகள் மெகா கூட்டணியில் இல்லை என்று அறிவித்துள்ளன.