பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து வருகிறது. அதனால் கடந்த சில நாட்களில் மட்டும் காஸா உட்பட சில பகுதிகளில் இருநூறுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் 61 குழந்தைகளும் அடங்கும். சுமார் 1400 பேர் இந்த தாக்குதலில் காயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக அமெரிக்காவின் வீதிகளில் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மக்கள்.
தொடர்ந்து பாலஸ்தீனத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால் பாலஸ்தீனியமும் பதிலடி கொடுத்து வருகிறது. பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா முழுவதும் வார இறுதி நாட்களில் கலிபோர்னியாவிலிருந்து நியூயார்க் வரையிலான நகரங்களின் வீதிகளில் இறங்கி மக்கள் போராட்டம் மேற்கொண்டனர். இந்த போராட்டத்தின் மூலம் இஸ்ரேலுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர் அவர்கள்.