அர்மீனிய நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில் பாரம்பரியமிக்க தண்ணீர் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அர்மீனிய நாட்டில் ‘ஆஸ்டிக்’ என்ற பெண் தெய்வம் தண்ணீருக்கு கடவுளாக இருப்பதாக கருதப்படுகிறது. அந்தக் கடவுளை வணங்கும் விதத்தில் ஆண்டுதோறும் இங்கு தண்ணீர் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வாளி மற்றும் கப்புடன் வீதியில் திரண்ட மக்கள் ஒருவர் மீது ஒருவர் தண்ணீர் அடித்து விளையாடினர். இந்தாண்டு நடைபெற்ற திருவிழாவில், உள்நாட்டு மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டு மக்களும் கலந்துகொண்டு ஆரவாரத்துடன் கொண்டாடினர்.
நாடு முழுவதும் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த தண்ணீர் திருவிழா மக்களை குளிர்வித்தது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் ஒருவர் மீது ஒருவர் தண்ணீர் அடித்து விளையாடி உற்சாகத்துடன் காணப்பட்டனர். இந்த திருவிழாவில் யார் கலந்து கொண்டாலும் உற்சாகமாக விளையாடி மகிழ்வார்களே தவிர வருத்தமளிக்கும் நிகழ்வுகள் எதுவும் நிகழாது.