இங்கிலாந்து நாட்டில் பென்குயின் ஒன்று பண்ணையில் இருந்து தப்பித்து மனிதர்களோடு மனிதர்களாக வீதியில் சுற்றியதைப் பார்த்த போலீஸார் ஆச்சர்யத்தில் உறைந்தனர்.
இங்கிலாந்திலுள்ள நாட்டிங்காம் போலீஸ் நேற்று வழக்கம்போல சாலையில் ரோந்து சென்றுள்ளார்கள். சாலையில் மனிதர்கள்தானே வருவார்கள் என்று நினைத்தவர்களுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. குட்டியாக தத்தி தத்தி பென்குயின் பறவை ஒன்று அழகாக நடந்து வருவதை கண்டார்கள். ஆச்சயத்தில் சில நிமிடம் உறைந்து போனவர்கள் பின்பு சுதாரித்துக்கொண்டு பென்குயினிடம் மனிதர்களிடம் விசாரிக்கத் துவங்குவதுபோல் ’எப்படி வந்தாய்’ என்று கேட்டுள்ளனர். அது திகைத்து திகைத்துப் பார்க்கவே அதற்கு ‘போப்போ’ என்று செல்லப்பெயர் சூட்டியுள்ளனர்.
அதோடு, அந்த பென்குயின் போலீஸுடன் நட்பாகியதோடு அவர்களின் புகைப்படங்களுக்கு விதவிதமான போஸ்களும் கொடுத்தது எனக் கூறும் அவர்கள், விரைவில் பென்குயினை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க உள்ளாதாக கூறுகின்றனர். ’பென்குயின் காட்டிலிருந்து வந்திருந்தால் அங்கேயே விட்டிருக்காலாம். ஆனால், இது அடுத்தவர் வளர்ப்பு என்பதால் அதனை நாங்கள் காட்டில் விட முடியாது’ என்று கூறியிருக்கிறார்கள்