மீண்டும் கொரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளதால் பெய்ஜிங்கின் சில பகுதிகளில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா என்ற வார்த்தை இன்று உலக நாடுகளிடையே ஒலித்துக் கொண்டு இருக்கிறது. முதன்முதலாக கொரோனா என்ற தொற்று பரவுவதாகவும், இது வூகான் மாகாணத்தில் ஒருவருக்கு ஏற்பட்டு இருப்பதாகவும் சீனா கூறியது. அதன்பின் பெரிய அளவில் கொரோனா பரவாமல் சீனா கட்டுப்படுத்தியது. ஆனால் அமெரிக்கா இத்தாலி ஸ்பெயின் இந்தியா போன்ற நாடுகள் கொரோனாவுக்கு எதிராக தீவிரமாக போராடி வருகின்றன.
உலக நாடுகள் கொரோனா அச்சுறுத்தலால் இயல்பு வாழ்க்கையை இழந்து நின்றாலும், 5 மாதங்களில் சீனா மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது. முடங்கிக் கிடந்த மக்கள் நடமாடத் தொடங்கினர். இந்நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளதால் பெய்ஜிங்கின் சில பகுதிகளில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.