தாய்லாந்து | மிக இளம்வயது பிரதமரானார் பேடோங்டர்ன் ஷினவத்ரா.. அரசியலில் நுழைந்தது எப்படி?

தாய்லாந்தின் மிக இளம்வயது பிரதமராக முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் இளைய மகள் பேடோங்டர்ன் ஷினவத்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பேடோங்டர்ன் ஷினவத்ரா
பேடோங்டர்ன் ஷினவத்ராஎக்ஸ் தளம்
Published on

தாய்லாந்து நாட்டு அமைச்சரவையில் பிச்சித் சைபான் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர், கடந்த 2008-ஆம் ஆண்டு, நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி 6 மாதங்கள் சிறைத் தண்டனை பெற்றவர் ஆவார். அவரை அமைச்சராக்கியது அந்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அந்தப் பதவியை, பிச்சித் சைபான் ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், பிச்சித் சைபானை அமைச்சராக நியமிக்க பரிந்துரை செய்த தாய்லாந்து பிரதமர் ஸ்ரெத்தா தவிசினை பதவிநீக்கம் செய்து அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

ஸ்ரெத்தா தவிசின்
ஸ்ரெத்தா தவிசின்

இதுதொடர்பாக நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “அமைச்சராக நியமிக்கப்பட்ட பிச்சித், ஒழுங்கீனம் காரணமாக சிறைத் தண்டனை பெற்றவர் என்பதை அறிந்தும், அவரை அமைச்சராக பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் நியமித்துள்ளார். இதன்மூலம் அரசியல் சாசனத்தின் ஒழுக்க நெறிமுறை விதிகள் மீறப்பட்டுள்ளன. இதனால் பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் பதவி நீக்கம் செய்யப்படுகிறார்’’ எனத் தெரிவித்தது. தற்போது ஸ்ரெத்தா தவிசின் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய பிரதமரை நாடாளுமன்றம் அங்கீகரிக்கும் வரை அமைச்சரவை காபந்து அடிப்படையில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிக்க: ஜம்மு - காஷ்மீரில் 3 கட்ட தேர்தல்.. ஹரியானாவில் அக்.1-ல் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

பேடோங்டர்ன் ஷினவத்ரா
தாய்லாந்து: அடுத்த பிரதமர் வேட்பாளர் தேர்வு... யார் இந்த பேடோங்டர்ன் ஷினவத்ரா?

இந்த நிலையில், புதிய பிரதமர் வேட்பாளரை தேர்வுசெய்யும் பணியில் ஆளும்கட்சியான பியூ தாய் கட்சி தீவிர ஆலோசனை மேற்கொண்டது. முன்னாள் நீதித்துறை அமைச்சர் சாய்காசெம் நிதிசிரி மற்றும் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் இளைய மகள் பேடோங்டர்ன் ஷினவத்ரா ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் இருந்தன. இவர்களில், பேடோங்டர்ன் ஷினவத்ராவை கட்சி தலைமை தேர்வுசெய்து நேற்று அறிவித்தது.

பேடோங்டர்ன் ஷினவத்ராவுக்கு பிரதமர் பதவி வழங்க கூட்டணி கட்சிகளும் ஒப்புதல் அளித்தன. புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக நாடாளுமன்றம் இன்று கூடியது.

அப்போது, பிரதமர் பதவிக்கான வாக்கெடுப்பில் பேடோங்டர்ன் ஷினவத்ரா வெற்றி பெற்று, தாய்லாந்தின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவர் தாய்லாந்தின் இரண்டாவது பெண் பிரதமர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். மேலும், தாய்லாந்தின் மிக இளம்வயது பிரதமர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இதையும் படிக்க: ”வினேஷ் போகத் இறந்து விடுவாரோ என அஞ்சினேன்”- எடைகுறைப்பு குறித்து பயிற்சியாளர் பகிர்ந்த ஷாக் தகவல்!

பேடோங்டர்ன் ஷினவத்ரா
மன்னராட்சியை விமர்சித்த இளைஞர்: 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த தாய்லாந்து நீதிமன்றம்!

37 வயதான இவர், 2006ஆம் ஆண்டு ராணுவப் புரட்சியில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் மூன்றாவது மகள் ஆவார். பாங்காக்கில் வளர்ந்த இவர், நகரின் மையத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் படித்தார். சிறுவயதிலிருந்தே அரசியலில் ஆர்வம் கொண்ட இவர், பின்னர் சர்ரே பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஹோட்டல் நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற ஐக்கிய இராஜ்ஜியம் சென்றார். பின்னர், தனது குடும்ப நிறுவனத்திற்காக வேலை செய்தார். 2019ஆம் ஆண்டு வணிகத்தில் பெயர்பெற்ற பிடோக் சூக்சாவாஸை ஷினவத்ரா திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது கட்சியான பியூ தாய், அவரைப் பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்ததன்மூலம், ஷினவத்ரா குடும்ப உறுப்பினர்களில் நான்காவது பிரதமராகப் பதவியேற்க உள்ளார் பேடோங்டர்ன் ஷினவத்ரா.

தக்சினின் மைத்துனர் சோம்சாய் வோங்சாவத் 2008ஆம் ஆண்டு சிறிதுகாலம் பிரதமராக இருந்தார்.

அடுத்து அவரது சகோதரி யிங்லக் ஷினவத்ரா 2011 முதல் 2014 வரை பிரதமராக இருந்தார்.

இருவரும் நீதிமன்றத் தீர்ப்புகளால் பதவியில் இருந்து தள்ளப்பட்டனர்.

பேடோங்டர்ன் ஷினவத்ராவின் தந்தை தக்சின் ஷினவத்ராவும் பிரதமராக இருந்துள்ளார்.

ஆகவே கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போதே இவரது பெயரும் பிரதமர் பட்டியலில் இருந்தது. ஆனால், இளம்வயது காரணமாக இவர் அப்போது நிராகரிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்க: இளம் வயதில் திருமண வாழ்க்கை!! பாகிஸ்தானில் அதிகரிக்கும் குழந்தைத் திருமணங்கள்.. காரணம் இதுதான்!

பேடோங்டர்ன் ஷினவத்ரா
தாய்லாந்து மொழியில் திருக்குறளை வெளியிட்டார் பிரதமர் மோடி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com