குழந்தை எப்படி வேண்டும்? - பெற்றோரே டிசைன் செய்து கொள்ளலாம்

குழந்தை எப்படி வேண்டும்? - பெற்றோரே டிசைன் செய்து கொள்ளலாம்
குழந்தை எப்படி வேண்டும்? - பெற்றோரே டிசைன் செய்து கொள்ளலாம்
Published on

30 ஆண்டுகளில் குழந்தைகளுக்காக உடலுறவு கொள்ளும் முறை வழக்கொழிந்து, தங்களுக்கு வேண்டிய மாதிரி குழந்தையை ஆய்வகங்களில் வடிவமைத்து கொள்ளலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

கலிபோர்னியாவில் உள்ள புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் உயிர் அறிவியல் துறையின் இயக்குனராக உள்ளவர் ஹாங்க் கிரேலி. இவர் கடந்த பல ஆண்டுகளாக குழந்தையை உருவாக்கும் முறை மற்றும் உயிரின் உருவாக்கம் குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தனது பல்கலைக்கழக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தம்பதிகள் தங்கள் டிஎன்ஏ-வை வைத்து ஆய்வகங்களில் கருவை வடிவமைக்கும் முறை இன்னும் முப்பது ஆண்டுகளில் மிகவும் பிரபலமாகி விடும் என்றார். பெண்ணின் தோல் செல்களை எடுத்து ஸ்டெம் செல்கள் உருவாக்க பயன்படுத்தலாம் என்றும், அதன்மூலமாக இறுதியில் கரு முட்டைகளை உருவாக்கலாம் எனவும், பின் அந்த முட்டைகள் மூலமாக ஆணின் ஸ்டெம் செல்களை சேர்த்து குழந்தையை உருவாக்கலாம் என்றும் கிரேலி தெரிவித்துள்ளார். இவ்வாறு செய்வதன் மூலம் பெற்றோர் தங்கள் குழந்தையை தாங்களே டிசைன் செய்துக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த முறை தற்போதே சாத்தியம் என்று கூறிய அவர், இன்னும் 30 ஆண்டுகளில் இந்த முறையை மிகவும் குறைந்த விலையில், உயர்ரக தொழில்நுட்பத்தில் செய்ய முடியும் என்றும் கூறினார். 30 ஆண்டுகளுக்கு பின் குழந்தைக்காக உடலுறவு கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தமில்லை என்றும் ஆராய்ச்சியாளர் ஹாங்க் கிரேலி தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com